×

தேர்தல் ஆணையர் அனூப் பாண்டே ஓய்வு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே கடந்த 2021ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 65 வயது ஆவதையொட்டி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனூப் பாண்டே ஓய்வு பெற்றுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்த விதிகளின் படி ஒன்றிய சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு தேர்தல் ஆணையர் பதவிக்கான 5 அதிகாரிகளின் பெயர்களை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யும். பிரதமர் தலைமையிலான தேர்வு குழு அதில் இருந்து ஒரு அதிகாரியை தேர்வு செய்யும். கடந்த 7ம் தேதி கூட்டம் ரத்தானதால் புதிய ஆணையரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமாரும் தேர்தல் ஆணையராக அருண் கோயல் ஆகிய இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.

The post தேர்தல் ஆணையர் அனூப் பாண்டே ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Anoop Pandey ,New Delhi ,Anup Chandra Pandey ,Uttar Pradesh ,India ,Lok Sabha ,Commissioner ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...