×

ரூ.20 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு: அதிமுக பிரமுகரின் மனைவி, ஊராட்சி தலைவி சிறை தண்டனை விதிப்பு!!

திருவாரூர்: ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக பிரமுகரின் மனைவியும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதாவை பிப்ரவரி 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி அமுதா சேரன்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஞானாம்பாள் மற்றும் ரோஸ்லின் என்பவரது ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அவர் இறந்து விட்டதாக கூறி போலி பாத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு தொடரபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஊராட்சி தலைவி அமுதாவை தகுதிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமுதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதாவை பிப்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமறைவாக இருந்த அமுதா சரணடைய உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அமுதா சரணடைந்தார்.

The post ரூ.20 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு: அதிமுக பிரமுகரின் மனைவி, ஊராட்சி தலைவி சிறை தண்டனை விதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,panchayat ,Tiruvarur ,Amuda ,Cherankulam ,Chairperson ,Amutha ,Dinakaran ,
× RELATED வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை...