×

பரங்கி வெல்ல குழம்பு

தேவையானவை:

பரங்கிக்காய் – ஒரு துண்டு,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 3,
புளி -எலுமிச்சை அளவு,
மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்,
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
வெல்லத்தூள் – ஒருடேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – அரைடீஸ்பூன்,
சோம்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – டீஸ்பூன்,
பச்சரிசி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பரங்கிக்காயை துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாகநறுக்குங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளபொருட்களை நன்கு வறுத்துப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைசேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி பரங்கிக்காய், தக்காளி,உப்பு சேருங்கள். தக்காளி கரைய வதக்கி, புளித்தண்ணீர் சேருங்கள். மிளகாய்தூள், மஞ்சள்தூள்,தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, வெல்லம், பொடித்த பொடி சேர்த்து 2நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த குழம்பு இது.

The post பரங்கி வெல்ல குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்