×

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி மாவு – ஒரு கப்,
கருப்பட்டி, வெல்லம் – தலா கால் கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியைப் போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதைப் பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.

The post கருப்பட்டி பணியாரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்