×

கடற்படை மாஜி வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் கத்தார் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தோஹா: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கத்தார் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபியில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட அவர் கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைக்கி வரவேற்றார்.

அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியும், கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி சந்தித்துப் பேசினர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, ​வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி என பல்வேறு துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் கத்தார் பயணமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும் என வெளிவிவகார செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். அப்போது கத்தார் சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளை விடுதலை செய்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. கத்தாருக்கு பிரதமர் ேமாடி, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கடற்படை மாஜி வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் கத்தார் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Navy ,Modi ,Qatar ,Doha ,Indian Navy ,United Arab Emirates ,Abu Dhabi ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா