×

மாநிலங்களவை தேர்தலில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு… அரசியல் வட்டாரத்தில் எழுந்தது சர்ச்சை!

மும்பை : மாநிலங்களவை தேர்தலில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றவர் பாஜக வேட்பர்ளராக அறிவிக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 56 எம்பிக்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. 56 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அஜித் கோப்ச்சாடே பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அவருடைய பின்னணி பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பதியப்பட்டு வருகின்றன. குறிப்பாக 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது, மசூதியின் மேல் அஜித் கோப்ச்சாடே நிற்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்திருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post மாநிலங்களவை தேர்தலில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு… அரசியல் வட்டாரத்தில் எழுந்தது சர்ச்சை! appeared first on Dinakaran.

Tags : Babri Masjid demolition ,BJP ,Rajya Sabha elections ,Mumbai ,Babri ,Masjid ,Rajya Sabha ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...