×

காசாவில் போரினால் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் மக்கள்.. மின் விளக்கை எரியச் செய்யும் 15 வயது சிறுவனின் புத்திசாலித்தனம்..!!

காசா: காசாவில் போரினால் வீடுகளை இழந்து டெண்டுகளில் மின் வசதியின்றி தங்கியுள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்றுவழியில் பயன்படுத்தி வருகின்றன. காசா – இஸ்ரேல் போரினால் ஏராளமான பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் டெண்டுகளில் தங்கியுள்ளனர். மின் நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மின் வசதியின்றி பொதுமக்கள் இருளில் வசித்து வருகின்றனர்.

எனினும் போர் சூழலிலும் மின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள சிறிய அளவிலான மாற்று வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நசீம் என்ற இளைஞர் சைக்கிள் சக்கரங்களை பொருத்தி தனது தையல் இயந்திரத்தை இயக்கும் மாற்று வழியில் உருவாக்கி கொண்டுள்ளார். 15 வயதான ஹாஉஷம் என்ற சிறுவன் பள்ளி பாடத்தில் படித்த பாடங்களை கொண்டு காற்றாடி, சிறிய மோட்டார் ஆகியவற்றை கொண்டு மின் உற்பத்தி செய்து வீட்டிற்கு தேவையான விளக்கு வெளிச்சத்தை உருவாக்கி கொண்டுள்ளார்.

முகமது ஷா என்ற மற்றொரு இளைஞர் தனக்கு கிடைத்த சோலார் பேனலை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்து செல்போன்களுக்கு இலவசமாக சார்ஜ் போட்டு தருகிறார். தொலைக்காட்சி, இணைய சேவை இல்லாத காசா பகுதியில் செய்திகளை ரேடியோ மூலம் மட்டுமே தெரிந்து கொள்கின்றனர். எனவே முகமது ஷாவின் உதவி அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக திகழ்கிறது.

The post காசாவில் போரினால் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் மக்கள்.. மின் விளக்கை எரியச் செய்யும் 15 வயது சிறுவனின் புத்திசாலித்தனம்..!! appeared first on Dinakaran.

Tags : Gaza ,-Israel ,Palestinians ,Dinakaran ,
× RELATED ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி