×

எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4 ம் நாள் அமர்வு தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மெட்ரோ ரயில் : எடப்பாடிக்கு முதல்வர் பதில்

மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி மோனோ ரயில் கேட்டவர்கள் தற்போது மெட்ரோ பற்றி பேசுவது மகிழ்ச்சி. மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் முனைப்பு காட்டவில்லை. மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததால் மாநில அரசின் நிதியில் இருந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்தவரை வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி தற்போதாவது பேசுவது ஆறுதல் தருகிறது என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ: இணைந்து போராட எடப்பாடிக்கு ஸ்டாலின் அழைப்பு

எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

2.5 லட்சம் வீடுகள் பழுதுபார்க்கப்படும்

கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுதுபார்க்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

The post எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Chief Minister MLA ,Edapadi Palanisami K. Stalin ,Chennai ,Edappadi Palanisami ,K. Stalin ,Tamil Nadu Legislative ,Assembly ,Dinakaran ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...