×

மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தியது. அப்போது 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொண்ட ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்; தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக 4 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம்.

தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் 5 விவரம் வெளியிட வேண்டும்.

2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நன்கொடை கொடுத்தோர் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் ஏப்.13-க்குள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

The post மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Supreme Court ,Delhi ,Chief Justice ,T. Y. ,Chandrasuet ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...