×

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான்கார்டு விண்ணப்பம் இ சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம். இந்த முகாமில் அனைத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...