×

சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. காலியாக சென்ற ரயில் எஞ்சினின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று சரிசெய்யப்பட்டது.

ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தடம் புரண்ட ரயில் எஞ்சினை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து மீட்டனர். இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.

The post சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Chanikulam ,Chennai Central ,Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...