×

சுற்றுலாத்தலங்கள் அமைக்க கோரும் இடங்களுக்கு துறைகளிடம் தடையில்லா சான்று பெற்று நடவடிக்கை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் ராஜபாளையம் எஸ்.தங்கபாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அளித்த பதில்: ராஜபாளையம் தொகுதியிலுள்ள சாஸ்தா கோயில் அணைப்பகுதி ராஜபாளையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், விருதுநகரில் இருந்து 78 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த இடத்திற்கு வார இறுதி நாட்கள் மற்றும் மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சுற்றுலாத்தலங்கள் மேம்பாடு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்று உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கலெக்டர் பரிந்துரை பெறப்பட்டால் இது குறித்து பரிசீலிக்கப்படும். எந்தெந்த இடங்களில் சுற்றுலா தலங்கள் அமைக்க கோருகிறார்களோ அந்த பகுதிகள் பொதுவாக வனத்துறை, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை, அறநிலையத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களை சுற்றுலாத்தலங்களாக மேம்படுத்த உரிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்று கலெக்டரின் பரிந்துரையோடு நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

The post சுற்றுலாத்தலங்கள் அமைக்க கோரும் இடங்களுக்கு துறைகளிடம் தடையில்லா சான்று பெற்று நடவடிக்கை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,K. Ramachandran ,Tourism Minister ,DMK ,Rajapalayam ,S. Thangapandian ,Legislative Assembly ,Shasta Koil dam ,Virudhunagar ,Ka. Ramachandran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...