×

மதுவிலக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு என பல யோசனைகளுடன் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

சென்னை: சென்னை தி.நகரில் நேற்று பாமக சார்பில் 22வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிழல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 2024-25ல் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

* நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,28,971 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,51,514 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
* தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு ஜூலை 25ம் தேதி தொடங்கப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெற்று வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் மே 1ம் தேதி முழு மதுவிலக்கு, அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
* தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
* குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும்.
* கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்காவாக மாற்றப்படும்.
* வேளாண்துறைக்கென முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். இவை உள்ளிட்ட 150 அம்சங்கள் குறிப்பிட்டுள்ளது.

The post மதுவிலக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு என பல யோசனைகளுடன் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Bamakha ,CHENNAI ,BAMA ,BAMAK ,President ,Anbumani ,GK Mani ,Bamaga ,Dinakaran ,
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்