×

இயற்கை எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்ப்பு: தீவிரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு

துபாய்: ஈரான் நாட்டில் உள்ள சத்தர்மஹால்-பக்தியாரி மாகாணத்தில் உள்ள அசுலேயே என்ற இடத்தில் இருந்து காஸ்பியன் கடலுக்கு அருகே உள்ள நகரங்களுக்கு குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயு எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், எரிவாயு எடுத்து செல்லும் குழாய் நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் எரிவாயு விநியோகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஈரானின் இயற்கை எரிவாயு விநியோக பிரிவின் கட்டுப்பாட்டு அதிகாரி சயீத் அக்லி கூறுகையில்,‘‘ தீவிரவாத சதி காரணமாக தான் எரிவாயு குழாயில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது’’ என்றார்.

The post இயற்கை எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்ப்பு: தீவிரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Iran ,DUBAI ,Azuleye ,Chattarmahal-Bakhtiari ,Caspian Sea ,gas pipeline ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...