×

மேற்கு வங்க சிறைகளில் 4 ஆண்டில் 62 குழந்தைகள் பிறப்பு: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தகவல்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் சிறைகளில் காவலில் இருக்கும்போது பெண் கைதிகள் பலர் கர்ப்பமாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமீபத்தில் வெளியானது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மேற்கு வங்க சிறைகளில் உள்ள அனைத்து குழந்தை பிறப்புகள் பற்றி பெறப்பட்ட தகவல்படி,கடந்த 4 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில் 62 குழந்தைகள் பிறந்துள்ளன. பெரும்பாலான பெண் கைதிகள் சிறைகளுக்கு வரும் போது கர்ப்பமாக இருந்தனர்.சில சமயங்களில் பரோலில் சென்று விட்டு திரும்பி வந்த கைதிகள் கர்ப்பமடைந்திருந்தனர். தனி பெண்கள் சிறை இல்லாத இடங்களில் சிறை வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ள பெண்கள் முகாம்கள் உள்ளன. அத்தகைய பெண்கள் முகாம்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆராய கமிட்டி அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மேற்கு வங்க சிறைகளில் 4 ஆண்டில் 62 குழந்தைகள் பிறப்பு: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Supreme Court ,NEW DELHI ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...