×

ஜவ்வாது மலையே சமூக நீதிக்கு சாட்சி: அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ‘எதிர்க்கட்சித்துணைத் தலைவர் உதய குமார், திருமங்கலம் பெரிய புள்ளான் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி பதிலளிக்கும் போது, சிவில் நீதிபதிகள் தேர்வில் பதி என்ற மலைவாழ் பெண் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்து இன்று சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். தமிழ் வழிக் கல்விக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று கலைஞர் அறிவித்ததால் தான் இன்று ஜவ்வாது மலையே சமூக நீதிக்கு சாட்சியாக திகழ்கிறது. அதற்கு நமது முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி முக்கிய சான்றாக விளங்குகிறது. இதேபோல இரு விழிகளையும் இழந்த காந்த் என்ற இளைஞர் தமிழ் வழியில் படித்து வங்கித் தேர்வு எழுதி வங்கியில் மேலாளாராக பணியில் சேர்ந்துள்ளார்.

இது தவிர மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் 20 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகம் திருமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிகளியில் இயங்கி வந்தது. அக்டோர் 2022 முதல் நிர்வாக சீரமைப்பின் காரணமாக இந்த பள்ளியிலேயே மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு தேவையான கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறினார்.

 

The post ஜவ்வாது மலையே சமூக நீதிக்கு சாட்சி: அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Javvadu Hill ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,School Education Minister ,Vice Leader ,Udaya Kumar ,Thirumangalam ,Periya Pullan ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா...