×

நடுநிலையோடு சட்டமன்றத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

தண்டையார்பேட்டை: நடுநிலையோடு சட்டமன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அரசு அச்சக குடியிருப்பு ரூ.34.49 கோடி செலவில் பார்க்கிங் வசதியுடன் 6 மாடியில் 96 வீடுகள் 18 மாதங்களில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கட்டிட பணியை இன்று ஆய்வு செய்தனர். அப்போது, பணி குறித்து ஒப்பந்ததாரர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர். கட்டிட பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: 10 தளங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக பார்க்கிங் வசதியுடன் 6 தளங்கள் ரூ.34.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் மேலும் 4 தளங்கள் கட்டப்பட்டு 140 குடியிருப்புகள் அமைய உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். கடந்த காலத்தில் சட்டசபை நடைபெறும் போது சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவரை அழைத்து வந்து அமரவைத்தனர். இன்று நடுநிலையோடு பாரபட்சமின்றி சட்டசபையை சபாநாயகரும், முதலமைச்சரும் நடத்தி வருகின்றனர். சட்டசபையில் அதிமுக வைத்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சபாநாயகரை முதல்வர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது, சென்னை மாநகர மேயர் பிரியா, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் லட்சுமணன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், வழக்கறிஞர் மருதுகணேஷ், பொன்.இளவரசன், லோகேஷ், அனிபா, ஆர்.டி.ராஜா, கவுன்சிலர் குமாரி நாகராஜ் மற்றும் அதிகாரிகள், திமுகவினர் உடனிருந்தனர்.

 

The post நடுநிலையோடு சட்டமன்றத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Saminathan ,Dandaiyarpettai ,First Minister of Assembly ,K. ,Stalin ,Mu. Fr. ,Seniamman Temple Street ,Puduwannarappettai ,Assembly ,Mu. Fr. Saminathan ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...