×

கும்மாயம்

தேவையானவை:

வெள்ளை முழு உளுந்து – ஒரு கப்,
பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்,
பாசிப்பருப்பு – கால் கப்,
கருப்பட்டி (அ) வெல்லம் – ஒன்றரை கப்,
நெய் – கால் கப்.

செய்முறை:

உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

The post கும்மாயம் appeared first on Dinakaran.

Tags : Kummayam ,
× RELATED காளான் கைமா