×

ஆப்பாயில் சாப்பிடலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

ஒருவரது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியதில், மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஓர் உணவு, முட்டை. அதில், ஆம்லெட், ஆப்பாயில், ஃபுல் பாயில், கரண்டி ஆம்லெட், கலக்கி, பொரியல், குழம்பு, பலகாரங்கள், கேக் வகைகள் எனப் பலவகைகளில் சமைக்கப்படுகிறது.

முட்டையில் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ,கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் பல்வேறு சத்துகள் இருக்கின்றன. எனவே, முட்டை ஓர் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், முட்டையின் நன்மை என்பது அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. உதாரணமாக, ஆம்லெட் போட்டு சாப்பிடும்போது அதில் 90% கலோரியும், 7.04 கிராம் கொழுப்பும், 6.27 கிராம் புரோட்டீனும், குறைந்த கார்போஹைட்ரேட்டும் கொண்டுள்ளது. இந்த அளவுகோல் என்பது வெறும் முட்டைக்கானது மட்டுமே. அதோடு சேர்த்து எண்ணெய், உப்பு மற்ற பொருள்கள் சேர்த்தால் கூடுதலான அளவுகளைக் கொண்டிருக்கும். எனவே முட்டையின் ஊட்டச்சத்து அதன் சமைக்கும் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.

அதுவே, குறைந்த எண்ணெய்விட்டு வெறும் முட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஆப்பாயிலில் 1500 முதல் 2000 வரை கலோரிகள் அடங்கியுள்ளது. மேலும், ஆப்பாயில் முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்ற கிருமி, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நோய்த்தொற்றை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் அதிகம். எனவே, அடிக்கடி ஆப்பாயில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.

அதுபோன்று. தினசரி முட்டையை சாப்பிடும் பழக்கமும் தவறானது. ஏனெனில் அதிலிருக்கும் மஞ்சள் கருவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது. இது தினசரி எடுத்துக் கொள்ளும்போது பலவித பிரச்னைகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள `நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்’ சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அபாயகரமான அளவு கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

எனவே, இதயப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஏதேனும் உடல் நலப் பிரச்னைகள், தீவிரமான மருத்துவச் சிகிச்சை எடுப்பவர்கள், மாத்திரைகள் சாப்பிட்டு வருவோர் ஆப்பாயிலை தவிர்ப்பது நல்லது. அவர்கள் முட்டையை முழுமையாக வேகவைத்து அவித்த முட்டையாக சாப்பிடுவதே நல்லது.அதேசமயம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்போர் ஆப்பாயில் முட்டையுடன் காய்கறிகளையும் சேர்த்து முழுமையான உணவாகவே சாப்பிடலாம்.

தொகுப்பு: ஸ்ரீ

The post ஆப்பாயில் சாப்பிடலாமா? appeared first on Dinakaran.

Tags : Appai ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...