×

தென்கொரியாவைக் கலக்கும் 80வயது இளவரசிகளின் இசைக்குழு: கிராமப்புற வாழ்க்கை குறித்து விளக்கும் வகையில் ராப் பாடல்கள்

தென்கொரியா: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த தென்கொரியாவை சேர்ந்த BTS பாப் இசைக்குழுவிற்கு போட்டியாக அந்த நாட்டில் 80 வயதை கடந்த பாட்டிகளின் இசைக்குழு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது. தென்கொரிய தலைநகர் ஜியாங்சாங் மாகாணம் சில்காங் மாவட்டத்தில் சுனையம் 7 இளவரசிகளும் என்ற இந்த குழுவினர் விவசாயம், கிராமப்புற வாழ்கை குறித்து விளக்கும் வகையில் ராப் பாடல்களை பாடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிகழ்ச்சியை நடத்தியதை தொடர்ந்து 150 பேர் கொண்ட ரசிகர் மன்றம் இந்த பாட்டிகளின் இசைக்குழுவுக்காக உருவாக்கப்பட்டது. நாளாக நாளாக இந்த குழுவின் பாடல்கள் பற்றி மக்கள் அறிய தொடங்க இவர்களது நிகழ்ச்சி குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வருகின்றன. வீதி, பள்ளி என்று எங்கு வேண்டுமானாலும் சென்று இந்த குழுவினர் இசை மழை பொழிந்து வருகிறார்கள்.

இந்த இசைக்குழுவின் தலைவி பார்க் ஜியோங்சன் மேடையாக வைத்த சுனி என்ற பெயரையே குழுவுக்கும் சூட்டியுள்ளார். இசை படுவதால் இளமை திரும்பியது போல உணர்வதாக அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டில் தென்கொரியாவின் மக்கள் தொகையில் 5 பங்கினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் நகரங்களை நாடி வருவதால் கிராமப்புறங்களில் முதியவர்களே அதிகமாக தனிமையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் மனதில் விரக்திக்கு இடமில்லாமல் உற்சாகத்தை ஊற்றெடுக்க செய்ய சுனியும் 7 இளவரசிகளும் இசைக்குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று ரசிகர்கள் பாராட்டி பேசிவருகிறார்கள்.

The post தென்கொரியாவைக் கலக்கும் 80வயது இளவரசிகளின் இசைக்குழு: கிராமப்புற வாழ்க்கை குறித்து விளக்கும் வகையில் ராப் பாடல்கள் appeared first on Dinakaran.

Tags : South Korea ,BTS ,Sunayam ,Silgang District ,Jiangsu Province ,Dinakaran ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...