×

மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்தது

டெல்லி: ஜனவரியில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துள்ளது என ஒன்றிய தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் 0.73 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஜனவரியில் 0.27 சதவீதமாக குறைந்துள்ளது. பல மாதமாக எதிர்மறை விகிதத்தில் மைனஸில் இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் கடந்த நவம்பரில் 0.37%ஆக உயர்ந்தது. டிசம்பரில் 0.73% ஆக மேலும் அதிகரித்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஜனவரியில் 0.46% குறைந்து 0.27% ஆகியுள்ளது. டிச. 2023-ல் 9.38% ஆக இருந்த உணவுப்பொருள் விலை ஏற்றம் ஜனவரியில் 6.85%ஆக குறைந்ததே பணவீக்க விகிதம் சரிய காரணம் என கூறப்படுகிறது. டிசம்பரில் 26.3%ஆக இருந்த காய்கறிகளின் விலை ஏற்றம் ஜனவரியில் 19.7% ஆக குறைந்துவிட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Ministry of Industry and Commerce ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...