×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் தொக அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் கொண்டுவந்த 2 தனித்தீர்மானங்களையும் அதிமுக ஆதரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் குறையக்கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு 10 கோரிக்கைகளை முன்வைத்து, அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். கொடுக்கபட்டுள்ள கோரிக்கைகள் ஏற்றுகொள்ளும் பட்சத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக முதலமைச்சர் தனிதீர்மானம் கொண்டுவந்து இதில் உள்ள பாதகங்கள் குறித்து சுட்டிகாட்டினார். இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தனர்.

பாஜகவின் தரப்பில் இருந்து இது தேவையற்ற பயம். ஒரே நாடு ஒரே தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் தான் குறிப்பிடபட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்கள் குறித்து வார்த்தைகள் இல்லை. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வானதி சீனிவாசன் பதிவு செய்தார். இந்த வகையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமானது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியுள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu Legislative Assembly ,K. ,Stalin ,Chennai ,CM ,Uddhav Thackeray ,Chief Minister of ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...