×

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் உண்ணாவிரதம்

ஊட்டி : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்ளின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வனழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்ளின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மே்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வனழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கு இடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலர் உதவி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாணைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை வழங்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணியினை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்னை உடனடியாக வழங்கிட வேண்டும்.

உங்கள் ஊரில் உங்களைத் தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் அதிக பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தினேஷ் சிறப்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu Revenue Department ,Revenue and Disaster Management Department ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...