×

மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்: ஒடிசாவில் அஸ்வினி வைஷ்ணவ் போட்டி

டெல்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் தேர்வாகிறார். மாநிலங்களவைக்கு வரும் 27ம் தேதி தேர்தலும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார். ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார். நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்.முருகன் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் எம்.பி. பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ளதால் மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராகிறார். எல்.முருகன் 2021 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஒன்றிய அமைச்சரானதை அடுத்து 2021-ல் மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வானார்.

The post மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்: ஒடிசாவில் அஸ்வினி வைஷ்ணவ் போட்டி appeared first on Dinakaran.

Tags : L.A. ,Murugan ,Ashwini Vaishnav ,Odisha ,Delhi ,Union Associate Minister ,L. Murugan ,Dinakaran ,
× RELATED மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன்...