- கந்தர்வகோட்டை பேருந்து நிலையம்
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர்
- கந்தர்வகோட்டை நகர்
- மாவட்ட கலெக்டர்
- மெர்சி ரம்யா
- மாவட்ட இயலாமை நலத்துறை
- வாலநாதன்
- தின மலர்
கந்தர்வகோட்டை,பிப்.14: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் படியும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் உலகநாதன் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் விழிப்புணர்பு கலை நிகழ்ச்சியும், நாட்டுபுற பாடல் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி அனைத்து வித மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுப்பு மேற்கொண்டு சமூகத்தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த துறை பணியாளர்கள் உங்கள் வீடு தேடி வரும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க வேண்டும் என நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்று திறனாளிகள் பயன்பெற வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது. தமிழக அரசும், ஒன்றிய அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்கனை பெற பொது மக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
The post திரளான பக்தர்கள் வழிபாடு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.