×

வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

செய்துங்கநல்லூர், பிப்.14: கருங்குளம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் வல்லநாடு ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி பணியாளர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இணைந்து கொசு மருந்து தெளிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி வல்லநாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், அங்கன்வாடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெங்கு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு சென்ற அவர், வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதோடு கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அழைக்குமாறு அறிவுறுத்தினார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், சண்முகபெருமாள், பாலக்கண்ணன், ஷாகீர், நித்திஷ், பிரசாத், ஆஸ்லின் செல்வராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vallanadu panchayat ,Karinganallur ,Vallannadu ,Karunkulam district ,Thoothukudi ,Karuppasamy ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...