×

அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை, பிப். 14: அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பூண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆண்டு விழாவை பார்க்க வந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். பள்ளியில் மோதலை உண்டாக்கி வரும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எறையூர் – ரிஷிவந்தியம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை போலீசார் மாணவர்கள்
மற்றும் பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Kalakurichi district ,Government High School ,Bundi village ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...