×

மோதலை ஏற்படுத்த முயற்சி அண்ணாமலை மீது வழக்கு அரசு அனுமதி வேண்டும்: சேலம் நீதிமன்றம் உத்தரவு

சேலம்: சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், சேலம் ஜேஎம்4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அதில், `பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு, பொது அமைதியும் கடுமையான விளைவு ஏற்படும். இவர் தொடர்ந்து குற்றங்களையே செய்து வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்` என கூறியுள்ளார். இந்த வழக்கு நேற்று சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரான பியூஸ் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்தார். அண்ணாமலை மீது இரண்டு சமூதாயத்திற்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் எனவும் நீதித்துறை நடுவர் யுவராஜ் உத்தரவிட்டார். மேலும் வழக்கை வருகிற 19ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post மோதலை ஏற்படுத்த முயற்சி அண்ணாமலை மீது வழக்கு அரசு அனுமதி வேண்டும்: சேலம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Annamalai ,Salem ,Beus ,Tamil Nadu ,BJP ,president ,JM4 ,``Baj ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...