×

1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை ‘பிரதமர் சூர்யா கர்’ திட்டம் அறிமுகம்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கான ‘பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்த் பிஜ்லி யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைத்து சூரிய மின் சக்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை மக்கள் பெறலாம் என ஒன்றிய அரச கூறி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தினை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்விற்காக ‘பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்த் பிஜிலி யோஜனா’ திட்டத்தை தொடங்குகிறோம். ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்திட்டம் மூலம், 1 கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும். சோலார் பேனல் அமைப்பதற்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.
மேலும் கணிசமான மானியங்கள், அதிக சலுகையுடன் கூடிய வங்கிக் கடன் மூலம் மக்களுக்கு எந்த விதமான செலவு சுமையில் இல்லாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யும்.

இத்திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களும் தேசிய ஆன்லைன் இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலம் சோலார் பேனல் திட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும், இந்த திட்டம் மின் கட்டணத்தை குறைத்து அதிக வருமானம் ஈட்ட உதவுவதோடு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வழி வகு்கும். அனைத்து நுகர்வோரும், குறிப்பாக இளைஞர்களும் https://pmsuryaghar.gov.in என்கிற இணையதளம் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பலனடையலாம். இவ்வாறு கூறி உள்ளார்.

The post 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரை ‘பிரதமர் சூர்யா கர்’ திட்டம் அறிமுகம்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Modi ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?