×

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

விருதுநகர், பிப்.14: விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்து மாணவ, மாணவியருடன் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், சீட்பெல்ட் அணிவது பாதுகாப்பு,  இதுவே பயணத்தின் உயிர்காப்பு, சாலை விபத்தில் அவசர உதவிக்கு 108, காவல்துறை உதவிக்கு 100, வாகனத்தில் வரும் புகை நம் வாழ்க்கைக்கு பெரும் பகை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

ஹாஜிபி செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளி அருகில் துவங்கிய பேரணி பாவாலி சாலை, புளுகானூரணி சாலை, பழைய பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், தேசபந்து மைதானம் வழியாக ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்து. இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வித்யா, நுகர்வோர் உபயோகிப்பாளர் உரிமைக் கமிட்டியின் தலைவர் முகம்மது எகியா, செயலாளர் மகேந்திரன், துணைத்தலைவர் சுதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,S.B. Perozhan Abdullah ,Virudhunagar District User Rights Committee ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...