×

சிவகங்கையில் நவீன மின் மயானம் அமைக்க கோரிக்கை

சிவகங்கை, பிப். 14: சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரதான மயானத்தில் நவீன மின் மயான வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை நகராட்சி 1வது வார்டு, திருப்பத்தூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே மயானம் உள்ளது. இந்த மயானம் சிவகங்கை நகரில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரதான மயானமாக உள்ளது. இங்கு சடலங்களை எரியூட்ட கடந்த 40ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் இருந்தது.

கட்டிடம் முற்றிலும் சிதைந்து, மேற்கூரை இடிந்த நிலையில், நான்கு புறம் உள்ள சுவர்களும் எவ்வித பிடிமானமும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு இக்கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் இதே மயானத்தில் சிறிய அளவிலான கொட்டகையில் வைத்து சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இந்தக் கொட்டகை சிறியதாக இருப்பதால் மழை நேரங்களில் சடலங்களை எரியூட்டுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

இறுதி சடங்குகளை அமர்ந்து செய்வதற்கும் போதுமான இடம் இல்லை. பெயரளவிற்கு கொட்டகைக்குள் எரியூட்டுவதற்கு பதில் அருகிலுள்ள காலியிடங்களிலேயே எரியூட்டலாம் என்றாலும் மழைக்காலத்தில் அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு நவீன வசதிகளுடன் கூடிய மின் மயானம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில்,‘‘பல இடங்களில் மின் மயானங்கள் உள்ளன. ஆனால் மாவட்ட தலைநகரில், மின் மயானம் இல்லை. கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பிரதான aமயானத்தில் எரியூட்ட கட்டிடம் இல்லாமல் உள்ளது. எனவே இங்கு மின் மயானம், சடங்குகள் செய்ய புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post சிவகங்கையில் நவீன மின் மயானம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Municipality 1st Ward, Tirupattur Road ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்