×

ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்: எஸ்பி தகவல்

 

திருவள்ளூர்:ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எஸ்பி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில், வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

விருப்பம் உள்ள தனியார் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 20 வயது முதல் 45 வயது வரை உள்ள பொதுநல சேவை, தன்னார்வ தொண்டில் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 29ம் தேதிக்குள், பிறப்பு சான்று, ஆதார், கல்வி தகுதி, உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ், தற்போதைய பாஸ்போர்ட் புகைப்படத்துடன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்: எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Home Guard Force ,Thiruvallur ,SP ,Local Police Force ,Tiruvallur District Police ,Srinivasa Perumal ,District Commander ,Deputy District Commander ,Tiruvallur District Home Guard Force ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...