×

டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: கலை அறிவியல் மாணவர்கள் தேர்வு

கரூர், பிப். 14: தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு கரூர் அரவக்குறிச்சி கலை அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில டென்னிஸ் பந்து கழகம் அனுமதியுடன் நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக சீனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், கரூர் மாவட்ட அணியில் விளையாடிய அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சூர்யா மற்றும் முத்துக்குமார் ஆகிய இரண்டு மாணவர்களும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.தேர்வு செய்யப்படட மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.

The post டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: கலை அறிவியல் மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tennis Ball Cricket Tournament ,Karur ,Karur Aravakurichi ,National Level Tennis Ball Cricket Tournament ,Namakkal District Cricket Association ,Tamil Nadu State Tennis Ball Association ,Tennis Ball Cricket ,Dinakaran ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்