×

நாளை கல்வி கடன் முகாம்

கரூர், பிப். 14: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கருர் மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்விக் கடன் முகாம், கரூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாளை (15ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில்,இ கல்விக் கடன் பற்றிய சந்தேகங்களுக்கும், ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யும் முறைகளையும் அறிந்து தெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை கல்வி கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : loan camp ,Karur ,Karur District Administration ,Karur District ,District Administration ,District Pioneer Bank ,Education Loan Camp ,Dinakaran ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்