×

வரத்து அதிகரிப்பு; பூண்டு விலை குறைந்தது: கிலோ ₹300க்கு விற்பனை மேலும் விலை குறைய வாய்ப்பு

சென்னை: மத்திய பிரதேசம், உபி, அரியானா ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு கொண்டு வரப்படுகிறது. மேற்கண்ட பகுதியில் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பூண்டு வரத்து குறைந்தது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ₹500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொது மக்கள் மிகவும் கடும் வேதனை அடைந்தனர்.இந்நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10 வாகனங்களில் இருந்து 200 டன் பூண்டுகள் வந்து குவிந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ₹300 விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் தமிழ்நாடு வியாபாரிகளின சங்க பேரவை மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன் கூறுகையில், ‘‘கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் வரத்து குறைவால் ஒரு கிலோ பூண்டு ₹500 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீர் என்று வரத்து அதிகரிப்பால் நேற்று காலை ஒரு கிலோ பூண்டு ₹300 விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து வரும்’’ என தெரிவித்தார்.

The post வரத்து அதிகரிப்பு; பூண்டு விலை குறைந்தது: கிலோ ₹300க்கு விற்பனை மேலும் விலை குறைய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Koyambedu ,Madhya Pradesh ,UP ,Aryana Rajasthan ,Gujarat ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...