×

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவள்ளூர்:திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி, மேலாளர் (நிர்வாகம்) விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எத்திராஜ், வேலு, விமலா குமார், சரத்பாபு, பூவண்ணன், வேதவல்லி சதீஷ்குமார், திலீப்ராஜ், நவமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஈக்காடு முதல் நத்தம்பேடு வரை 205 தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 24 மணி நேரமும் கனரக வாகனங்களை பயன்படுத்துவதால் ஊராட்சிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக ஈக்காடு, புன்னப்பாக்கம், மேலானுர், கீழனூர், தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிகளில் கனிமவள விதிகளை மீறி அதிகளவு மண் எடுத்துள்ளனர்.

இதனால் ஏரிகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. எனவே கனிம வளத்துறையும், நீர்வளத்துறையும் ஏரிகளில் மண் எடுத்துள்ள அளவீடுகளை அளந்து கணக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து சிமென்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் அமைப்பது, அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தருவது உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Municipal ,Union Committee ,THIRUVALLUR URATSI UNION ,J. Jayaseli Jaibalan ,Union Vice President ,M. Bargatullah Khan ,Regional ,Gunasekaran, ,Ravi ,Thiruvallur Municipal ,Union ,Meeting ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்