- காட்டுப்பாக்கம்
- சட்டமன்ற உறுப்பினர்
- அத்திகல்
- பூந்தமல்லி
- கிருஷ்ணசுவாமி
- பஞ்சாயத்து
- பஞ்சாயத்து யூனியன்
- அடிப்பக்கல்
பூந்தமல்லி:பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் ரூ.2.37 கோடி மதிப்பில் சாலை, கால்வாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கு கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீநகர் பகுதியில் ரூ.62.62 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை, ஸ்ரீநகர் பூங்கா சாலையில் ரூ.49.98 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை,
கோபுரசநல்லூர் முதல் நாகலட்சுமி நகர் வரை ரூ.30.2 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ஜெயலட்சுமி நகரில் ரூ.47.14 லட்சம் மதிப்பில் தார் சாலை, ஜெயலட்சுமி நகரில் ரூ.28.15 லட்சம் மதிப்பில் சிமென்ட் கான்கிரீட் கால்வாய், செந்தூர்புரம் விரிவாக்கம் 1 மற்றும் 2 அவென்யூ ஆகிய பகுதியில் ரூ.15.1 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.2.37 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது.
இதில் ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ் செல்வன், வி.குமார், ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, ஜனார்த்தனன், புகழேந்தி, இளையான், பாஸ்கர், வயலை பிரபாகரன், பிரகாஷ், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், திருமலை ராஜா, கேசவன், தணிகாசலம், பரிமேலழகன், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கவுதமன், கண்ணன் ஊராட்சி தலைவர் ஷீலா சரவணன், திமுக கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், ரமேஷ், சுப்பையா, செந்தமிழரசு, தமிழ்ச்செல்வி, அரிகிருஷ்ணன், பந்தன், தியாகு, குமார், அருண்குமார், ஸ்ரீதர், கன்னியப்பன், விமலா, அன்பு, சரத்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post காட்டுப்பாக்கத்தில் ரூ.2.37 கோடியில் நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.