×

பெயின்டர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: முன் விரோதம் காரணமாக பெயின்டரை வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பரத் (எ) தக்காளி பரத் (44). பெயிண்டராக வேலை செய்து வருகிறார்கள். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018 மே 28ம் தேதி பரத் செம்பியம் நெடுஞ்செழியன் சந்திப்பு அருகே வந்தபோது, சிலர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். படுகாயமடைந்த பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து, பரத்தின் மனைவி சுபேதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வியாசர்பாடியை சேர்ந்த பார்த்திபன் (19), தேவராஜ் (22), தீபக்குமார் (19), ஒட்டேரியை சேர்ந்த கணேசன் (19) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அல்லிகுளத்தில் உள்ள 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.டி.லட்சுமி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.சுரேஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதால் பார்த்திபன், கணேசன், தேவராஜ், தீபக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post பெயின்டர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Additional Sessions Court ,Chennai ,Vyasarpadi, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...