×

நீலகிரியில் பூத்துள்ள ரோடோரென்ட் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை ஊட்டியில் நிலவுவதால், அந்த நாடுகளில் உள்ள மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அங்கிருந்து அதிகளவு கொண்டு வந்து இங்கு நடவு செய்யப்பட்டது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை படைத்த அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன.

இதில், குறிப்பாக தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ரோடோரென்ட் மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மரங்களில் டிசம்பர் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இளஞ்சிவப்பு நேரத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். இதை அருகில் பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப் போன்று காட்சி அளிக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post நீலகிரியில் பூத்துள்ள ரோடோரென்ட் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Rotorent ,Nilgiri ,Neelgiri district ,Europe ,Australia ,Japan ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...