×

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி: மேலும் 60க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியைச் சுற்றி கனமழை பெய்து வருவதால், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் பணியை முடித்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர், நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை மீட்டனர். இவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண்ணுக்குள் புதைந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மோசமான வானிலை நிலவுவதோடு, மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி: மேலும் 60க்கும் மேற்பட்டோர் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Philippines ,Masara ,Tao de Oro ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!