×

பொங்கல் கலவை குழம்பு

தேவையானவை:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு,
சேனைக் கிழங்கு,
கருணைக் கிழங்கு,
வாழைக்காய்,
கத்திரிக்காய்,
அவரை,
உருளைக் கிழங்கு ( சற்று பெரிதாக நறுக்கிய துண்டுகள்) – இரண்டரை கப்
ஊறவைத்த மொச்சைக்கொட்டை – கால் கிண்ணம்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பெருங்காயம் – 1 துண்டு
வெந்தயம் – கால் தேக்கரண்டி
கடுகு – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை :

நறுக்கிய காய்கறிகள், மொச்சை அனைத்தையும், குக்கரில் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், புளியை தேவையான தண்ணீர்விட்டு கரைத்து அதில் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து கெட்டியானதும், அதனுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் கறிவேப்பிலை, கொத்து மல்லித் தழை சேர்த்தால் மணக்கும் கலவை குழம்பு தயார்.

The post பொங்கல் கலவை குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...