×

கோகைன் போதை பொருட்கள் கடத்தல் நைஜீரியா வாலிபரிடம் தீவிர விசாரணை: புழல் சிறையில் மீண்டும் அடைப்பு

அண்ணாநகர்: மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து கோகைன் போதைப்பொருட்களை வாங்கிவந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த சின்டு ஒனாச்சி(47), அவரது மனைவி எஸ்மெல்சியாமிகாய்(50), சியோ இன்லெக்வு(40) ஆகியோரை கடந்த மாதம் அமைந்தகரைபோலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், அண்ணாநகர், பெரும்பாக்கம், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அனிருத் சவுத்ரி(34), வால்சாம்(30), ரித்தேஷ் பரிகார(34) மற்றும் அங்கூர் சோட்டா(32) ஆகிய 4 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போதை பொருட்கள் சென்னைக்கு வந்தது எப்படி என்று கண்டுபிடிக்க முக்கிய நபர் சின்டு ஒனாச்சியை கடந்த 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமைந்தகரை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி சின்டு ஒனாச்சியை புழல் சிறையில் இருந்து பாதுகாப்புடன் அமைந்தகரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், கோகைன் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நைஜீரிய நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதியில் இருந்தும் போதைப்பொருட்களை வாங்கி வந்து சுமார் பத்து வருடங்களாக தமிழ்நாடு உள்பட பல பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். நைஜீரிய நாட்டில் இருந்து போதை பொருட்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து பின்னர் தமிழ்நாட்டில் வேலை செய்துவரும் அந்த நாட்டினரின் வங்கி கணக்கு மூலம் பண பரிமாற்றம் செய்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது காவல் முடிந்ததும் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

The post கோகைன் போதை பொருட்கள் கடத்தல் நைஜீரியா வாலிபரிடம் தீவிர விசாரணை: புழல் சிறையில் மீண்டும் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Puzhal prison ,Annanagar ,Sindu Onachi ,Esmelsiamigai ,Seo Inlekwu ,Mumbai ,Bengaluru ,Chennai ,Puzhal ,Dinakaran ,
× RELATED டிடிஎஃப் வாசன் தனது செல்போனை...