- டிரம்ப்
- எங்களுக்கு
- வாஷிங்டன்
- ஐக்கிய மாநிலங்கள்
- நேட்டோ
- பனிப்போர்
- ஐரோப்பிய ஒன்றியம்
- சோவியத் ரஷ்யா
- தின மலர்
வாஷிங்டன்: நோட்டோ கூட்டமைப்பு நாடுகளை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பனிப்போர் காலங்களில் சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1991ல் பனிப்போர் முடிவடைந்த பின்பு போலந்து உள்ளிட்ட பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நோட்டோவில் இணைந்தன.
நோட்டோவின் ராணுவ பட்ஜெட்டில் பெரும் பகுதியை அமெரிக்கா தொடர்ந்து அளித்து வருகிறது.
ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நோட்டோ நாடுகளில் அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா அதிபராக முன்பு டிரம்ப் இருந்தபோது நோட்டோ கூட்டமைப்பிற்கு அமெரிக்கா செலவிடும் தொகை மிக அதிகம் என்றும் இது தேவையற்ற வெட்டி செலவும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், 2024 அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப் நோட்டோ பட்ஜெட்டிற்கு ஐரோப்பிய உறுப்பினர் நாடுகள் அதிக தொகை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி ஒதுக்க தவறினால் அந்நாடுகள் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா அவர்களுக்கு உதவாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தான் அதிபரானால் செலவு செய்யாத உறுப்பினர் மீது ரஷ்யா படையெடுப்பதை ஆதரிப்பேன் என்று கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்பின் இந்த பேச்சுக்கு சொந்த கட்சியான குடியரசு கட்சியிலிருந்தே அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நோட்டோ கூட்டமைப்பின் தலைவர் இது நோட்டோ நாடுகளுக்கு பாதுகாப்பை வலுவிழக்க செய்யும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள் மீது சர்வாதிகார நாடுகள் படையெடுப்பதை டிரம்ப் ஊக்குவிக்கிறார் என்றும் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சிரத்தன்மையை ஆபத்துக்கு உட்படுத்துகிறார் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
The post நோட்டோவிற்கு போதிய நிதி ஒத்துக்கீடு செய்ய வேண்டும்: நிதி கொடுக்காத நாடுகளை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.