×
Saravana Stores

காதல்ஜோடிகள் ஆர்வமாக வாங்குகின்றனர்; நாளை காதலர் தினம் முன்னிட்டு ரோஜாக்கள் விலை கடும் உயர்வு

அண்ணாநகர்: நாடு முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரெட் ரோஸ் ஒரு கட்டு 300க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் ரோஸ் ஒரு கட்டு 250 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை ரெட் ரோஸ் மற்றும் கலர் ரோஸ் பூக்கள் வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக ஒரு கட்டு ரெட்ரோஸ் 350க்கும் கலர் ரோஸ் கட்டு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ரோஜா பூக்களை வாங்க காதல் ஜோடிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது; நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால் ரெட் ரோஸ், கலர் ரோஸ் வாங்குவதற்கு காதலர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் அதிகமாக வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால் புறநகர் பகுதிகளில் ஒரு கட்டு ரெட் ரோஸ் 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கலர் ரோஸ் கட்டு 300 க்கும் ஒரு ரோஸ் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.

The post காதல்ஜோடிகள் ஆர்வமாக வாங்குகின்றனர்; நாளை காதலர் தினம் முன்னிட்டு ரோஜாக்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Annanagar ,Koyambedu ,Dinakaran ,
× RELATED பூக்கள் விலை கடும் சரிவு