- உச்ச நீதிமன்றம்
- நீதிமன்றம்
- அஇஅதிமுக
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பி.வலர்மதி
- ஆனந்த வெங்கடேஷ்
புதுடெல்லி: கடந்த 2001-06ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடந்த போது, மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி என்பவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்த போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வளர்மதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள்?. இதுபோன்ற வழக்குகளை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்; பின்னர் அந்த உத்தரவில் ஏதேனும் தேவை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு வரலாம்’ என்று கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள்?.. அதிமுக மாஜி அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி appeared first on Dinakaran.