×

சென்னை நகரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சென்னை நகரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடந்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு தடை விதிக்க கோரி ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் கார் பந்தயம் நடத்த ரூ.40 கோடியை அரசு செலவு செய்வது தவறு என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதிகள் அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்; மழை, வெள்ளம் காரணமாக இந்த கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கார் பந்தயம் நடத்துவதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால் அந்த இடத்தை கடக்கும்போது ஒளி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். அதற்கான அனுமதி மருத்துவமனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் மீது பிப்ரவரி 16ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

The post சென்னை நகரில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Formula 4 car race ,Chennai ,Government of Tamil Nadu ,Chennai High Court ,Tamil Nadu government ,Formula 4 car ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...