×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறிய பிரச்சினைகள் மட்டுமில்லை பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தான் திறந்தோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏ செல்லூர் ராஜு கேள்வி அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் பதில் அளித்து பேசினர். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கிளாம்பாக்கத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை தீர்க்க தான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்த பிறகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை; பெரிய பிரச்சனைகள் இருந்தன. அவையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். பிரச்சனைகளை தீர்த்து வைத்து பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம். நேரில் அழைத்து செல்கிறோம் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூறுங்கள், எங்கள் அமைச்சர்கள் அதனையும் தீர்த்து வைப்பார்கள்,”இவ்வாறு விளக்கம் அளித்தார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறிய பிரச்சினைகள் மட்டுமில்லை பெரிய பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து தான் திறந்தோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Klambakkam bus station ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu Legislative Assembly ,DMDK ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...