×

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊழியர்கள் குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் நிதியுதவி: தென் கொரிய நிறுவனத்தின் புதிய திட்டம்!

சியோல் : தென் கொரியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 2022ம் ஆண்டு 0.78 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2026ம் ஆண்டில் 0.59 ஆக சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1977ம் ஆண்டுக்கு பின் இல்லாத வகையில் மக்கள் தொகை 3.5 கோடி அளவிற்கு சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தென்கொரியாவில் உள்ள Booyoung குழுமம் என்கிற கட்டுமான நிறுவனம் ஒன்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்றும் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ. 1.82 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதே போல பியாங்யாங் குழும நிறுவனம் குழந்தை பெற்றுக் கொண்ட தனது ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 43.58 கோடி வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதங்களை அதிகரிக்க சீனாவிலும் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான Trip.com என்ற சீன நிறுவனம், தங்களது ஊழியர்களின் குழந்தைக்கு ஒன்றிலிருந்து ஐந்து வயது ஆகும் வரை வருடம் தோறும் இந்திய மதிப்பில் ரூ.1.1 லட்சம் வழங்கியது.

The post பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊழியர்கள் குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் நிதியுதவி: தென் கொரிய நிறுவனத்தின் புதிய திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Seoul ,South Korea ,Dinakaran ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...