×

பெரியார் பல்கலை. பதிவாளர் விடுப்பில் சென்றார்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், மருத்துவ விடுப்பில் சென்றார். பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உயர்கல்வித்துறை பரிந்துரைத்தது. உயர்கல்வித்துறை பரிந்துரைத்த நிலையிலும் பதிவாளரை துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் முதுகுவலி என்று கூறி 12 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதாகக் கூறி பதிவாளர் தங்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.

The post பெரியார் பல்கலை. பதிவாளர் விடுப்பில் சென்றார் appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Department of Higher Education ,Vice Chancellor ,Registrar ,Thangallam ,Higher Education Department ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...