×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ வைப்பு சம்பந்தமாக கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீ வைத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

புகார் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தீ வைத்த தீனதயாளன் என்பவரை சென்னை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பல்லாவரத்தைச் சேர்ந்த தயாளன் மீது ஏற்கெனவே பைக் திருட்டு வழக்கு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kabaliswarar temple gate ,Mayilapur ,Chennai ,Kabaliswarar temple ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை